ஸ்ரீராமாயணம் பாலபாடம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

நம் பாரத தேசத்தில் பலகாலமாக அனுபவிக்கப்பட்டு வரும் இதிஹாஸங்கள் ஸ்ரீராமாயணமும் மஹாபாரதமும். இவ்விரண்டில் ஸ்ரீராமாயணம் நம்முடைய ஆசார்யர்களால் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளது,. ஸ்ரீராமபிரானின் சரித்ரத்தை மிக அழகாக நமக்குக் காட்டும் பொக்கிஷம் இது. மேலும் சீதாப்பிராட்டியின் பெருமை ஸ்ரீலக்ஷமணன், ஸ்ரீபரதாழ்வான், ஸ்ரீசத்ருக்னாழ்வான், ஸ்ரீஹனுமான், ஸ்ரீகுஹப்பெருமாள், ஸ்ரீவிபீஷணாழ்வான் மற்றும் பலரின் பெருமையைக் காட்டக்கூடிய அற்புதக் காவியம் இது.

நம் குழந்தைகள் சிறு வயதிலேயே ஸ்ரீராமாயணத்தை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். குலசேகராழ்வார் ஸ்ரீராம சரித்ரத்தைத் தன்னுடைய பெருமாள் திருமொழியின் கடைசிப் பதிகத்தில் மிக அழகாக வெளியிட்டுள்ளார். இதைக் கொண்டு நாமும் இங்கே ஸ்ரீராமாயணத்தை அனுபவிப்போம். ஆண்டாள் பாட்டி இதை அழகிய கதைகளாகச் சொல்ல, குழந்தைகள் கேட்டு மகிழும் விதத்தில் இந்தத் தொடர அமைக்கப்படுகிறது.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *