Category Archives: Beginner’s guide

Learners Series – SrIvaishNava YouTube shorts (ஶ்ரீவைஷ்ணவ சிறு காணொளிகள்)

Published by:

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

grandma-children

Santhai class schedule, joining details, full audio recordings (classes, simple explanations (speeches) etc) can be seen at http://pillai.koyil.org/index.php/2017/11/learners-series/ .

சிறு காணொளிகள் (YouTube shorts)

ஸ்ரீவைஷ்ணவக் கொள்கைகள் (SrIvaishNava Principles)

  1. நாராயண’ சப்தத்தின் விளக்கம் – Explanation for the word ‘nArAyaNa’ – https://youtu.be/RWrM1YtypDc
  2. பகவான் என்ற சொல்லுக்கு விளக்கம் – Explanation of the term ‘bhagavAn’ – https://youtu.be/jGfWdasGc58
  3. எம்பெருமானின் திவ்ய திருமேனி – bhagavAn’s divine form – https://youtu.be/BoawL4eP2tM
  4. பகவானின் உபய விபூதி நாதத்வம் – bhagavan’s ubhaya vibUthi nAthathvam – https://youtu.be/nWppis6qpbg
  5.  பகவானின் உபய லிங்கத்வம் – bhagavAn’s ubhayalingathvam – https://youtu.be/LY39cHQFADI
  6. பகவானின் முக்யமான அடையாளங்கள் – bhagavAn’s unique identities – https://youtu.be/vXNbEzOF2MM
  7. பரத்வாதி பஞ்சகம் – பகவானின் ஐந்து நிலைகள் bhagavAn’s five different forms – https://youtu.be/4ImGEcCvNpw
  8. ஸ்ரீமந்நாராயணனே உபாயமும் உபேயமும் – bhagavAn as the means and goal – https://youtu.be/8kmL7_ROfJk

பகவத் குணாம்ருதம் (bhagavath guNAmrutham)

  1. எம்பெருமானின் வாத்ஸல்யம் (தாய்மை குணம்) – emperumAn’s vAtsalyam (motherly instincts) – https://youtu.be/xNKC6AN0B-0
  2. எம்பெருமானின் ஸௌசீல்யம் (எளிமை) – emperumAn’s sousIlyam (simplicity) – https://youtu.be/OBpYJySxwP4
  3. எம்பெருமானின் ஸாம்யம் (ஸமமாக இருப்பது) – emperumAn’s sAmyam (to be the same as adiyAr) – https://youtu.be/e7VopWWf-bs
  4. எம்பெருமானின் ஆர்ஜவம் (நேர்மை) – emperumAn’s Arjavam (integrity) – https://youtu.be/dNOHEw7hA4I
  5. எம்பெருமானின் ஸௌஹார்த்தம் (அடியார்களுக்கு நன்மையைத் தேடுவது) – bhagavAn’s sauhArdham ( seeking the benefit of the adiyArs) – https://youtu.be/7LDq97pjDmQ
  6. எம்பெருமானின் மார்த்தவம் (மென்மை) – bhagavAn’s mArdhavam (softness) – https://youtu.be/4klacDzMWU4
  7. எம்பெருமானின் மாதுர்யம் (இனிமை) – bhagavAn’s mAdhuryam (sweetness) – https://youtu.be/SUYKS_1lrLg
  8. எம்பெருமானின் காம்பீர்யம் (ஆழமான மனதுடைமை ) – bhagavAn’s gAmbhIryam(deep intentions) – https://youtu.be/_LOvhYDlV9E
  9. எம்பெருமானின் ஔதார்யம் (வள்ளல் தன்மை) – bhagavAn’s audhAryam(benevolence) – https://youtu.be/tS7XVDoj6wE
  10. எம்பெருமானின் சாதுர்யம் – bhagavAn’s chAthuryam (ingenuity) – https://youtu.be/4e5EM0w3pKY
  11. எம்பெருமானின் ஸ்தைர்யம் – bhagavAn’s sthairyam (stability) – https://youtu.be/4NfRDJEsNlc
  12. எம்பெருமானின் தைர்யம் – bhagavAn’s dhairyam (courage) – https://youtu.be/S4yb5vg6oME
  13. எம்பெருமானின் ஶௌர்யம் – bhagavAn’s souryam (excited among enemies as He is among adiyArs) – https://youtu.be/1yAxE9zJgj8
  14. எம்பெருமானின் பராக்ரமம் – bhagavAn’s parAkramam (prowess) – https://youtu.be/-6SlH_nCj0o
  15. எம்பெருமானின் ஸத்யகாமத்வம் – bhagavAn’s sathyakAmathvam (Enjoying every wish of His, being an object of enjoyment for others) – https://youtu.be/YVyrlGhsLc8
  16. எம்பெருமானின் ஸத்ய ஸங்கல்பத்வம் – bhagavAn’s sathya sangalpathvam ( Fulfilling every wish of His) – https://youtu.be/EXc4t4E_FUA
  17. எம்பெருமானின் திருமேனி ஔஜ்வல்யம் – bhagavAn’s aujvalyam ( full of light) – https://youtu.be/nDE0ZFUUgBo
  18. எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம் – bhagavAn’s saundharyam ( beauty in every limb) – https://youtu.be/Vwc6NoMmJIU
  19. எம்பெருமானின் திருமேனி ஸௌகந்த்யம் – bhagavAn’s saugandhyam (source of all fragrances) – https://youtu.be/91riKZZLtr0
  20. எம்பெருமானின் திருமேனி ஸௌகுமார்யம் – bhagavAn’s saukumAryam ( softness, delicate) – https://youtu.be/RgAa6OZzUxo
  21. எம்பெருமானின் திருமேனி லாவண்யம் – bhagavAn’s lAvaNyam ( overall beauty ) – https://youtu.be/SsLwNaPRaaI
  22. எம்பெருமானின் திருமேனி யௌவநம் – bhagavAn’s yauvanam ( youthfulness) – https://youtu.be/m4GjmaxePaw
  23. எம்பெருமானின் குணங்களின் இயற்கைத் தன்மை – bhagavAn’s auspicious qualities being natural – https://youtu.be/1Yt3YxrRKlM
  24. எம்பெருமானின் அநவதிகாதிஶய குணங்கள் – bhagavAn’s anavadhikAthiSaya guNas ( limitless greatness) – https://youtu.be/EPetJNNYYJE
  25. எம்பெருமானின் ஞானம் – emperuman’s auspicious qualities – gyAnam ( knowledge) – https://youtu.be/rT4ULryPW2I
  26. எம்பெருமானின் ஐஶ்வர்யம் – bhagavAn’s auspicious qualities iswarya ( to be a master) – https://youtu.be/VBAl1W3KUBw
  27. எம்பெருமானின் வீர்யம் – emperuman’s auspicious qualities – vIryam (not changing, not tired) – https://youtu.be/RbqOmPDbHkg
  28. எம்பெருமானின் ஶக்தி – emperuman’s auspicious qualities – sakthi ( ability to execute, to hold everything together, to be the source of entire universe) – https://youtu.be/hqUnATYluWs
  29. எம்பெருமானின் தேஜஸ் – emperuman’s auspicious qualities – thejas ( to win over everyone) – https://youtu.be/xkEAqrFRsMI
  30. எம்பெருமானின் ஸ்வரூபம் – emperuman’s auspicious qualities -swaroopam ( no blemishes, all auspicious qualities, different from everything else) – https://youtu.be/cIAFHmm6xXQ
  31. எம்பெருமானின் நிர்குணத்வம் – emperuman’s auspicious qualities nirgunathvam(without any blemishes) – https://youtu.be/x0qc4vz48Zs
  32. எம்பெருமானின் திருக்கல்யாண குணங்கள் – emperuman’s thirukkalyana gunangal ( full of auspiciousness) – https://youtu.be/UbMJUXn88RI
  33. எம்பெருமானின் பலம் – bhagavAn’s balam – https://youtu.be/7XizypFGgSE
  34. எம்பெருமானின் க்ருதஜ்ஞதை – bhagavAn’s kruthagyathA – https://youtu.be/PwQQHGxetWc
  35. எம்பெருமானின் க்ருதித்வம் – bhagavAn’s kruthithvam – https://youtu.be/DIe-gxLO7W4
  36. குணக்கடலாக விளங்கும் எம்பெருமான் – bhagavAn being an ocean of auspicious qualities – https://youtu.be/801iAHuU7xo
  37. குணத்திரள்களை உடைய எம்பெருமான் – bhagavAn having collection of qualities – https://youtu.be/eaoBiFR_dtc

ஸ்ரீராமாயணம் பாலபாடம் – மிதிலை அடைந்தார் தசரதர்

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< சிவதனுசை முறித்த ராமன்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள்.

பராசரன்: சென்ற முறை, ஜனகமன்னன் தன் மந்திரிகளிடம் விவாஹமுகூர்த்தப்பத்திரிகை கொடுத்துத் தசரத மன்னனை அழைத்து வருமாறு உத்தரவிட்டதாகச் சொல்லிமுடித்தீர்கள்.

பாட்டி: ஆமாம் பராசரா. ஜனக மன்னனுடைய கட்டளையின்படியே அவருடைய மந்திரிகள் அயோத்தி நகர்க்குச் சென்று சேர்ந்து, தசரத மன்னனைக் காணப்பெற்றார்கள். பிறகு கைகூப்பிக்கொண்டு, ”மன்னர் மணியே! மிதிலை மன்னர் ஜனகர் உமது யோகக்ஷேமங்களை விசாரித்தார். மேலும், தன் புதல்வியான ஸீதைக்கு விவாஹசுல்கமாக வைக்கப்பட்டிருந்த சிவதனுசை, வெகுகாலமாக ஒருவராலும் அசைக்கவும் முடியாதபடியிருந்து, இப்பொழுது உம்முடைய தவப்புதல்வனான ராமபிரானால் எடுத்து வளைக்கப்பட்டு முறிந்தபடியால், முன்னமே செய்த உறுதிமொழியின்படி ஸீதையை ராமபிரானுக்குத் திருக்கல்யாணம் செய்துகொடுப்பதாக நிச்சயித்திருப்பதை நீங்கள் ஒப்புக்கொண்டு, உங்கள் பரிவாரத்தோடு மிதிலா நகர்க்கு விஜயம் செய்து சுபகாரியத்தைச் சடக்கென நிறைவேற்றிக்கொடுக்கவேணும் என்று வேண்டிக்கொள்கிறார்” என்று தசரத மன்னனிடம் விண்ணப்பம் செய்தார்கள்.

வேதவல்லி: தசரத மன்னன் இந்த விஷயத்தைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பாரல்லவா பாட்டி?

பாட்டி: ஆமாம் வேதவல்லி. அந்த விஷயத்தைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த தசரத்த மன்னன் வசிஷ்டர், வாமதேவர் முதலிய முனிவர்களையும், மந்திரிகளையும் அழைப்பித்து, அந்த சுபச் செய்தியை அறிவித்து, எல்லோருமாக மறுதினமே புறப்பட்டு மிதிலா நகர்க்குச் செல்லவேண்டுமென்று முடிவெடுத்தார்.

அத்துழாய்: மறுநாள் தசரத மன்னன் தன்னுடைய பரிவாரங்களோடு மிதிலை நகர்க்குப் புறப்பட்டாரா? மேலே என்ன நடந்தது என்று சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி: ஆமாம் அத்துழாய். மறுநாள் காலையில் தசரத மன்னன் தன்னுடைய சேனைகளையும், பல்லக்குகளையும், தேர்களையும், காலாட் படைகளையும், புரோஹிதர்களையும் முன்னே புறப்படச்செய்து, தானும் புறப்பட்டு நான்கு நாட்கள் கடந்து ஐந்தாம் நாளில் யாவரும் மிதிலா நகரை அடைந்தார்கள்.

வ்யாசன்: ஆஹா! இவர்கள் வருகையானது மிகவும் ப்ரஹ்மாண்டமாக இருந்திருக்கும் போலிருக்கிறதே பாட்டி?

பாட்டி: ஆமாம். இவர்கள் வருகையறிந்து மிகவும் மகிழ்ச்சியோடு ஜனக மன்னன் முறையாக வரவேற்றார். பெரும் புகழையுடைய தசரத மன்னர் தன் பரிவாரங்களோடு எழுந்தருளியிருப்பது தனக்கும் தன் குலத்திற்கும் பெரும் பாக்கியம் என்று வாயாரச் சொல்லிக்கொண்டு மகிழ்ந்தார். இப்போது நடைபெற்று வருகின்ற எனது வேள்வியின் முடிவில் விவாஹசுப முகூர்த்தத்தை நிறைவேற்றிக்கொடுக்கவேணும் என்று ஜனக மன்னர் தசரத மன்னரைப் பிரார்த்திக்க, அதற்கு தசரத மன்னர், ”கன்னிகையைக் கொடுக்க கடமைப்பட்டிருக்கின்ற நீர் எந்த சுப முகூர்த்தத்தில் கொடுக்கின்றீரோ அந்த சுப முகூர்த்தத்தில் நாங்கள் பெற்றுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்” என்றார். இப்படி இருவரும் அழகாக வார்த்தையாடிக் கொண்டு அந்த இரவை மகிழ்ச்சியாக கழித்தனர்.

பராசரன்: கேட்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது பாட்டி. மேலும் சொல்லுங்கள்.

பாட்டி: இதே ஆவலோடு நாளைவரை காத்திருங்கள் குழந்தைகளே. நாளை நீங்கள் வரும்போது மேலும் சுவையான பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள்.

குழந்தைகளும் பாட்டி கூறியதை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டார்கள்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org