ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆண்டாள் பாட்டி திருப்பாவை அனுஸந்தித்துக் கொண்டு இருக்கும் போது, பேரர்களான வ்யாஸனும் பராசரனும் பாட்டியை நோக்கி ஓடி வருகிறார்கள்.
பராசர: பாட்டி, எனக்கு ஒரு சந்தேகம். ஸ்ரீவைஷ்ணவம் என்று கேள்விப்பட்டு வருகிறோமே, அதன் பொருள் என்ன என்று சொல்லேன்!
ஆண்டாள் பாட்டி: ஓ! மிக அருமையான கேள்வி பராசரா! ஸ்ரீவைஷ்ணவம் என்பது முழு முதற்கடவுளான ஸ்ரீமன் நாராயணனைக் காட்டிக்கொடுக்கும் அழிவற்ற பாதை; அவர் அடியார்கள் அவர் மேல் ஆழ்ந்த பரிபூரண பக்தி கொண்டவர்கள்;
வ்யாஸ: ஆனால் பாட்டி, ஸ்ரீமன் நாராயணனை ஏன் வணங்க வேண்டும்? வேறு யாரையும் தொழக்கூடாதா ?
ஆண்டாள் பாட்டி: இது ஒரு நல்ல கேள்வி வ்யாஸா! விளக்கமாக சொல்கிறேன் கேள்! ஸ்ரீவைஷ்ணவம் என்பது, வேதங்கள், வேதாந்தங்கள், ஆழ்வார்களின் திவ்ய் ப்ரபந்தங்களை அடிப்படையாகக் கொண்டது; இவற்றை ப்ரமாணங்கள் என்று கூறுவர் – ப்ரமாணம் என்றால் நம்பத்தகுந்த உண்மையான ஆதாரம் என்று பொருள்; ப்ரமாணங்கள் அனைத்தும் ஒன்று சேர ஸ்ரீமன் நாராயணனே அனைத்துக்கும் காரணமானவர் என்று விவரிக்கின்றன. நாம் அத்தகைய உன்னதமான பரமாத்மாவையே வணங்க வேண்டும். அத்தகைய உயர்ந்த காரணமானவர் ஸ்ரீமன் நாராயணனே என்று ப்ரமாணங்கள் காட்டிக்கொடுக்கின்றன. ஆகையால் ஸ்ரீவைஷ்ணவத்தின் உட்கருத்து ஸ்ரீமன் நாராயணனே.
வ்யாச: இதை அறிந்து கொள்ளவே இனிமை பாட்டி! நாம் ஸ்ரீ வைஷ்ணவத்தை பின்பற்றுகிறோமே பாட்டி, நாம் பொதுவாக செய்ய வேண்டியவை என்ன பாட்டி?
பாட்டி: எப்பொழுதும் பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆசார்யர்களைத் தொழுவதே நாம் செய்யவேண்டிய தர்மம்.
பராசர: பாட்டி, ஸ்ரீமன் நாராயணனே நமது பரிபூரண இலக்கு என்றாயே; பின் ஏன் தாயார், ஆழ்வார்கள், ஆசார்யர்களை வணங்க வேண்டும் ?
ஆண்டாள் பாட்டி: மிக நல்ல கேள்வி கேட்டாய் பராசரா! தாயார் பெருமாளின் தர்மபத்னி (மனைவி) ஆவார். பார், பெருமாள் நமது தந்தை, தாயார் நமது தாய் ஆவார். இவர்களை நாம் சேர்த்தே வணங்க வேண்டும். நாம் அவ்வப்பொழுது நம் தாய் தந்தையரை சேர்த்தே வணங்குகிறோம் இல்லையா – அதைப்போன்றே நாம் பெருமாளையும் தாயாரையும் சேர்த்தே வணங்க வேண்டும். ஆழ்வார்களும், ஆசார்யர்களும் ஸ்ரீமன் நாராயணின் அன்பிற்குரிய பக்தர்களாவர். அவர்கள் ஸ்ரீமன் நாராயணின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தவர்கள். இவர்கள் தாம் பெருமாள் தாயார் இவர்களின் மேன்மையை நமக்கு தெளிவாகத் காட்டிக் கொடுத்தனர் – ஆகையினால் நாம் இவர்களையும் வணங்குகிறோம்.
வ்யாச: நாம் வேறு என்னென்ன செய்ய வேண்டும் பாட்டி?
ஆண்டாள் பாட்டி: ஸ்ரீவைஷ்ணவர்களாகிய நாம் அனைவரும் பெருமாள், தாயார் இவர்களே நம் தாய் தந்தை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் எல்லோருடைய நன்மைக்காக பிரார்த்திக்க வேண்டும். ஸ்ரீமன் நாராயணின் மேல் பிறரும் பக்தி செலுத்த நாம் உதவி செய்ய வேண்டும்.
பராசர: அதனை எவ்வாறு செய்ய வேண்டும் பாட்டி?
ஆண்டாள் பாட்டி: ஓ!, அது மிக சுலபம். நாம் யாரைக் கண்டாலும், அவர்களுடன் பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆசார்யர்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும். பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆசார்யர்கள் இவர்களின் மேன்மைகள் குறித்து அறிந்து கொண்டு அவர்களும் பக்தி கொள்வர். இது அனைவருக்கும் சிறந்த நன்மை பயக்கும்.
வ்யாஸ: இது மிகவும் சிறந்தது பாட்டி! நம் பொழுதைப் போக்க எவ்வளவு அற்புதமான வழி? ரொம்ப நன்றி பாட்டி. இன்று நாங்கள் ஸ்ரீ வைஷ்ணவம் குறித்த அடிப்படைகளைக் கற்றுக் கொண்டோம்.
ஆண்டாள் பாட்டி: நல்ல புத்திச்சாலித்தனமான கேள்விகளைக் கேட்ட சுட்டிப்பிள்ளைகள்! உங்களால் பெருமாளும் தாயாரும் இன்று மிகவும் உகப்படைந்திருப்பார்கள். வாருங்கள், கொஞ்சம் பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
அடியேன் கீதா ராமானுஜ தாஸி
ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2014/07/beginners-guide-introduction-to-srivaishnavam/
வலைத்தளம் – http://pillai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
Find the articles useful.
Adiyen would be grateful if the paripashai used by Srivaishnava is sent to rrajarraja@gmail.com
Excellent