Monthly Archives: January 2019

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – அழகிய மணவாள மாமுனிகள்

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< திருவாய்மொழிப் பிள்ளை

ஆண்டாள் பாட்டி மணவாள மாமுனிகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் வந்த குழந்தைகளை வரவேற்றாள்.

பாட்டி: வாருங்கள் குழந்தைகளே, எல்லோரும் கோடை விடுமுறையை எப்படிக் கழித்தீர்கள் ?

பராசரன்: பாட்டி, விடுமுறை நன்றாகக் கழிந்தது. இப்பொழுது நாங்கள் மணவாள மாமுனிகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். அவரைப் பற்றிச் சொல்கிறீர்களா?

பாட்டி: சரி குழந்தைகளே. அவர் ஆழ்வார் திருநகரி என்னும் ஊரில் திகழக்கிடந்தான் திருநாவீறுடையப்  பிரானுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் ஆதிசேஷனுடைய அவதாரமாய் யதிராஜருடைய புனராவதாரமாய் (மறுபிறவியாய்)  பிறந்தார். அவருக்கு அழகிய மணவாளன் (அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்றும்) என்று பெயரிட்டனர். அவர் சாமான்ய சாஸ்திரம் (அடிப்படை சித்தாந்தம் ) மற்றும் வேதாத்யயனத்தை அவரது தகப்பனாரிடம் கற்றார்.

வ்யாசன்: பாட்டி, திருவாய்மொழிப் பிள்ளை அவரது ஆசார்யன் அல்லவோ?

பாட்டி: ஆம் வ்யாஸா, திருவாய்மொழிப் பிள்ளையின் பெருமைகளைக் கேட்டு, அவரிடம் சரணாகதி செய்தார். அருளிச்செயல்களைக் கற்றுத் தேர்ந்தவரான இவர், திருவாய்மொழி மற்றும் ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானமும் மிகவும் சிறப்பாக வழங்குவார். ராமானுஜரின் மீது இவருக்கு அளவில்லாப் பற்று இருந்ததால் அவருக்கு ஆழ்வார்திருநகரியில் பவிஷ்யதாசார்யன் சந்நிதியில் நிறைந்த கைங்கர்யம் செய்தார். யதீந்த்ரரின் (ஸ்ரீ ராமானுஜர்) மேல் அவர் வைத்திருந்த எல்லையில்லா அன்பினால் அவருக்கு யதீந்த்ர ப்ரவணர் (யதீந்த்ரரின் மேல் ஆசை மிகுந்தவர்) என்ற பெயர் ஏற்பட்டது .

பின்னர் அவரது ஆசார்யரின் நியமனம் நினைவுக்கு வந்ததால் ஸ்ரீரங்கத்திற்குச் சென்று வாழ்ந்து நம் ஸம்ப்ரதாயத்தைப் பரவச்செய்தார். ஸ்ரீரங்கத்திற்குச் சென்ற பிறகு ஸந்யாஸாச்ரமத்தை ஏற்று ‘அழகிய மணவாள முனிகள்’ என்றும் ‘பெரிய ஜீயர்’ என்றும் விளங்கலானார். 

முமுக்ஷுப்படி, தத்வத்ரயம், ஸ்ரீவசனபூஷணம் ஆகிய ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு வேதம், வேதாந்தம், இதிஹாசங்கள், புராணங்கள், அருளிசெயல்களிலிருந்து  மேற்கோள்கள் காட்டி வ்யாக்யானங்கள் எழுதினார். 

இராமானுச நூற்றந்தாதி, ஞானசாரம்,  சரம உபாய நிஷ்டையை (ஆசார்யனே எல்லாம் என்ற புரிதல்) விளக்கும் ப்ரமேய சாரம் ஆகியவற்றுக்கு மாமுனிகள் உரைகள் எழுதினார். சில ஸ்ரீவைஷ்ணவர்களின் கோரிக்கைக்கு இணங்க திருவாய்மொழி மற்றும் நம்மாழ்வாரின் மேன்மையை விளங்கச்செய்யும் திருவாய்மொழி நூற்றந்தாதியை  எழுதினார். பூர்வாசார்யர்களின் போதனைகளை, அவர்களது பிறந்த இடங்கள், திருநக்ஷத்ரங்கள், திருவாய்மொழி மற்றும் ஸ்ரீவசனபூஷணத்தை உயர்த்திக் காட்டும் வகையில்   உபதேச ரத்தின மாலையைத்  தொகுத்தார். 

மாமுனிகள் திவ்யதேச யாத்திரைகள் பல செய்து அனைத்து பெருமாள்களுக்கும், ஆழ்வார்களுக்கும்  மங்களாஸாசனங்கள் செய்தார்.

வேதவல்லி: மாமுனிகளைப் பற்றியும் அவரது கைங்கர்யங்களைப் பற்றியும் கேட்பதற்கே வியப்பாக உள்ளது, பாட்டி!

பாட்டி: ஆம் வேதவல்லி, நம்பெருமாளுக்குக் கூட நம்மாழ்வார் அருளிய  திருவாய்மொழியின் வ்யாக்யானமாகிய ஈடு முப்பத்தாறாயிரப்படியின்  காலக்ஷேபத்தை  மாமுனிகளிடம் கேட்க வேண்டும் என்று ஆசை இருந்தது. மாமுனிகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பத்து மாதத்திற்குக் காலக்ஷேபம் செய்து ஆனி  திருமூலத்தன்று சாற்றுமுறை செய்தார்.

srisailesa-thanian-small

சாற்றுமுறை நிறைவேறிய பிறகு, நம்பெருமாள், அரங்கநாயகம் என்ற பெயர்கொண்ட  சிறுவனாக மாமுனிகளின் முன்னே வந்து “ஸ்ரீசைலேச தயாபாத்திரம் தீபக்த்யாதி குணார்ணவம்” என்கிற ச்லோகத்தை அஞ்சலி முத்திரையுடன் (தன் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு) சொன்னார். அனைவரும் மெய்சிலிர்த்துப் போய் இந்தச் சிறுவன் நம்பெருமாளே என்று புரிந்துகொண்டனர். 

பராசரன்: நம்பெருமாளாலேயே கவுரவிக்கப்படுதல் பெரிய பெருமையாயிற்றே. பாட்டி, இதனால் தான் நாம் அனைத்து சேவாகாலங்களையும் இந்த தனியனோடே தொடங்குகிறோமா?

பாட்டி: ஆம், பராசரா. எம்பெருமான் இந்தத் தனியனை அனைத்து திவ்யதேசங்களுக்கும் அனுப்பி சேவாகாலத் தொடக்கத்திலும் முடிவிலும் இதனை அனுசந்திக்கச் சொன்னார். திருவேங்கடமுடையானும் திருமாலிருச்சோலை அழகரும் இந்தத் தனியனை அருளிச்செயல் அனுசந்தானத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் அனுசந்திக்க வேண்டுமாறு பணித்தனர்.

தன் இறுதி நாட்களில், மிகுந்த சிரமத்தோடே, மாமுனிகள் ஆசார்ய ஹ்ருதயத்திற்கு  பாஷ்யம் (உரை) எழுதினார். தன் திருமேனியை விட்டு பரமபதத்திற்கு ஏக முடிவு செய்தார். ஆர்த்தி ப்ரபந்தத்தை அனுசந்தித்துக் கொண்டே இந்த சம்சாரத்திலிருந்து தன்னை விடுவித்து ஏற்றுக்கொள்ளுமாறு எம்பெருமானாரை ப்ரார்த்தித்தார். பின், எம்பெருமானின் அனுக்ரஹத்தால், மாமுனிகள் பரமபதத்திற்கு ஏகினார். அச்சமயம் செய்தி கேட்டு, பொன்னடிக்கால் ஜீயரும் ஸ்ரீரங்கத்திற்குத்  திரும்ப வந்து, மாமுனிகளுக்கு அனைத்தச்  சரம கைங்கர்யங்களையும் செய்தார்.

அத்துழாய்: பாட்டி, மாமுனிகளைப் பற்றி பேசியதால் நாங்கள் அனைவரும் மிகுந்த பயனடைந்தோம். அவரது திவ்ய சரித்திரத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. 

பாட்டி: எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே , அத்துழாய். பெரியபெருமாளாலேயே ஆசார்யனாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால், மாமுனிகளோடு ஆசார்ய ரத்னஹாரம் முடிவடைந்து ஓராண்வழி குருபரம்பரையும் முற்றுப்பெறுகிறது.

நமது அடுத்த சந்திப்பில், மாமுனிகளின் சிஷ்யர்களான அஷ்டதிக்கஜங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

அடியேன் பார்கவி ராமானுஜதாசி 

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2018/06/beginners-guide-mamunigal/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருவாய்மொழிப் பிள்ளை

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்கள்

ஆண்டாள் பாட்டி எப்பொழுதும் போல மடப்பள்ளியில் வேலைகள் செய்து கொண்டிருக்கையில் குழந்தைகள் பிள்ளை லோகாச்சார்யரின் சிஷ்யர்களைப் பற்றி மேலும் கேட்டுத்தெரிந்து கொள்ளும் பொருட்டு பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். பாட்டி புன்சிரிப்புடன் அவர்களை வரவேற்றாள். ஸ்ரீரங்கநாதரின் பிரசாதங்களைக்  குழந்தைகளுக்குக்  கொடுப்பதற்காக தயாராக காத்திருந்தாள்.

பாட்டி: வாருங்கள் குழந்தைகளே. பெருமாள் பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் எல்லாருக்கும் சென்ற முறை நாம் பேசியது நினைவிருக்கிறதா?

வ்யாசன் : பாட்டி, நாம் கூரகுலோத்தமதாசர், விளாஞ்சோலைப் பிள்ளை ஆகியோரைப் பற்றித் தெரிந்து கொண்டோம்.  “ஆசார்ய அபிமானமே  உத்தாரகம்“ என்றும் தெரிந்து கொண்டோம்.

பாட்டி: உங்களைக் கண்டு பெருமையாக இருக்கிறது, குழந்தைகளே. இன்று நான் மற்றுமொரு ஆசார்யரான பிள்ளைலோகாசார்யரின் சிஷ்யர், திருமலை ஆழ்வார் என்பவரைப் பற்றிச் சொல்கிறேன்.

அத்துழாய்:  பாட்டி, ஆழ்வாரின் திருவாய்மொழியின் மீது கொண்டிருந்த பற்றின் காரணத்தாலேயே திருமலை ஆழ்வாருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது என்று கேட்டிருக்கிறேன். சரியா, பாட்டி?

பாட்டி: மிகச் சரி அத்துழாய். அவர் திருவாய்மொழிப் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்; ஸ்ரீசைலேசர், சடகோபதாசர் என்ற பெயர்களும் உண்டு. அவர் நம்மாழ்வார் மீதும் ஆழ்வாரின் திருவாய்மொழியின் மீதும் கொண்டிருந்த ஈடுபாட்டினால் அவருக்கு அப்பெயர் ஏற்பட்டது. திருமலையாழ்வாருக்கு, அவரது சிறுபிராயத்திலேயே பிள்ளைலோகாசார்யரின் திருவடித்தாமரைகளில் பஞ்ச ஸம்ஸ்காரம் நடந்தது. ஆனால் சில காலத்திலேயே திருமலையாழ்வார் நம் சம்பிரதாயத்திலிருந்து விலகி மதுரை மன்னருக்கு  முக்கிய ஆலோசகராக ஆனார். 

வ்யாசன் : ஓ, அப்படி என்றால் திருமலையாழ்வாரை நம் சம்பிரதாயத்தின் பக்கம் திருப்பியவர் யார், பாட்டி?

பாட்டி : குழந்தைகளே, உங்கள் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். பிள்ளைலோகாசார்யர் அவருடைய அந்திம காலத்தில் கூரகுலோத்தமதாசரையும்  இதர சிஷ்யர்களையும் திருமலையாழ்வாரை  திருத்தி நம் சம்பிரதாயத்தில் ஈடுபடுத்துமாறு பணித்தார்.

வேதவல்லி: பாட்டி, திருமலையாழ்வாரை  கூரகுலோத்தமதாசர் எவ்வாறு  திருத்தினார்? எங்களுக்குச்  சொல்லுங்கள் பாட்டி. 

பாட்டி: சொல்கிறேன். ஒரு தடவை, திருமலையாழ்வார் தம் பல்லக்கில் வலம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் ஆழ்வாரின் திருவிருத்தப் பாசுரங்களைச் சொல்லிக்கொண்டிருந்த கூரகுலோத்தமதாசரைக் கண்டார். பிள்ளைலோகாசார்யரின் ஆசி பெற்றிருந்தவராகையால் அவர் தாசரின் மேன்மையை உணர்ந்தார்.  பல்லக்கிலிருந்து இறங்கிய திருமலையாழ்வார், திருவிருத்தத்தின் கருத்துகளைத் தமக்கு உபதேசிக்குமாறு தாசரிடம் கேட்டார். 

பராசர : பாட்டி, திருமலையாழ்வார் தாசரிடம் கற்றதனைப் பற்றி எங்களுக்கு மேலும் சொல்லுங்களேன்.

பாட்டி :  உபதேசிக்கும் பொருட்டு தாசர் திருமலையாழ்வாரிடம்  செல்ல அங்கே திருமலையாழ்வார், பிள்ளைலோகாசார்யரின் தனியனைக் கூறியவாறே திருமண்காப்பு தரித்துக் கொண்டதைக் கண்டு மிக உகப்படைந்தார். ஆனால் திருமலையாழ்வாரால் சில சமயங்களில் வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று; அதற்காக அவர் தாசரிடம் மன்னிப்பை  வேண்டினார். அதனை ஏற்றுக்கொண்ட தாசரும் அவருக்கு தன் சேஷ பிரசாதத்தைக் (மீதமான உணவு)  கொடுத்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனைப்  பெற்ற திருமலையாழ்வார், அது முதல் உலக விஷயங்களிலிருந்து முற்றும் விலகி, தம்முடைய அத்தனை அதிகாரத்தையும் இளவரசனிடம் ஒப்படைத்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

தாசரின் இறுதிக் காலத்தின் பொழுது, அவர் திருமலையாழ்வாரை திருக்கண்ணங்குடிப் பிள்ளையிடம் சென்று அவரிடம் திருவாய்மொழியின் பொருளைக் கற்குமாறு பணித்தார்.  அதன் பின், அவர் ரஹஸ்யார்த்தங்கள் அனைத்தையும் விளாஞ்சோலைப் பிள்ளையிடம் கற்றறிந்தார். அதன் பின்னர் நம் சம்பிரதாயத்தை தலைமையேற்று நடத்துமாறு திருமலையாழ்வாரை, தாசர் நியமித்தார். தாசர் பரமபதத்தை அடைந்தவுடன் திருமலையாழ்வார் பிள்ளைலோகாசார்யரை த்யானித்துக்கொண்டே தாசருக்கு அத்தனை சரம கைங்கர்யங்களையும் (இறுதி சடங்கு) மிகச் சிறப்பாகச் செய்தார்.

வ்யாசன் : பாட்டி, அதன் பின் திருமலையாழ்வார் நம் சம்பிரதாயத்தை ஏற்று நடத்தினாரா ?

பாட்டி : இல்லை வ்யாசா. நான் முன்பே சொன்னது போலே, திருமலையாழ்வார் திருக்கண்ணங்குடிப் பிள்ளையிடம் சென்று திருவாய்மொழியைக் கற்கலானார். அவர் அதன் ஒவ்வொரு பாசுரத்தின் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ள விரும்பினார். எனவே அதனைக் கற்க அவரை பிள்ளை, திருப்புட்குழிஜீயரிடம் அனுப்பினார். ஆனால், துரதிர்ஷ்டவசத்தால் அவர் அங்கு செல்லும் முன்பாகவே, ஜீயர் பரமபதத்தை அடைந்து விட்டார். மிகுந்த நிராசை அடைந்த திருமலையாழ்வார், தேவப்பெருமாளுக்கு (காஞ்சிபுர வரதர்) மங்களாசாஸனம் செய்ய எண்ணினார்.

பராசர: பாட்டி,  இந்த சம்பவம் ராமானுஜர் ஆளவந்தாரைக் காணச்செல்ல, அவர் செல்வதற்கு சற்று முன்பாக ஆளவந்தார் பரமபதித்ததை போலவே இருக்கிறது. சரிதானே பாட்டி?

பாட்டி: மிகச்சரி பராசரா. அதன் பின்பு தேவப்பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்வதற்காக அங்கே சென்றார்; அங்கே அவரை அனைவரும் வரவேற்றனர், தேவப்பெருமாளும் அவருடைய ஸ்ரீசடகோபம், மாலை, சாற்றுப்படி (சந்தனக்குழம்பு)  ஆகியவற்றை அளித்து அனுக்ரஹித்தார். தேவப்பெருமாள், நாலூர்ப்பிள்ளையை திருமலையாழ்வாருக்கு திருப்புட்குழி ஜீயரிடமிருந்து கற்க இயலாது போன, அருளிச்செயல்களின் (திவ்யபிரபந்தம்) கருத்துக்களையும் திருவாய்மொழி ஈடு  வ்யாக்கியானத்தையும் போதிக்குமாறு பணித்தார்.  

உபதேசிப்பதில் நாலூர்பிள்ளை மிக மகிழ்வடைந்தாலும், தம்முடைய மூப்பின் காரணமாக அவரால் திருமலையாழ்வாருக்கு சரிவர கற்பிக்க இயலாது என்று தோன்ற, தேவப்பெருமாளும் நாலூர்பிள்ளையின் புதல்வரான நாலூராச்சான்பிள்ளையைத்  திருமலையாழ்வாருக்கு உபதேசிக்க பணித்தார்.  இந்த வாக்கினை மிகுந்த மகிழ்வுடன் ஏற்ற நாலூர் பிள்ளை, திருமலையாழ்வாரை  நாலூராச்சான் பிள்ளையிடம் உகப்புடன் அழைத்து சென்று அவருக்கு ஈடையும் அருளிச்செயல் பொருளையும் உபதேசிக்குமாறு பணித்தார். இந்த நிகழ்ச்சியை கேள்வியுற்ற திருநாராயணபுரத்து ஆயி, திருநாராயணபுரத்துப்பிள்ளை ஆகியோரும் மற்றும் சிலரும் தாங்களும் அருளிச்செயலின் பொருளையும் ஈடு விஷயத்தையும் அறிந்து கொள்ளும் பொருட்டு, நாலூராச்சான் பிள்ளையையும்  திருமலையாழ்வாரையும் திருநாராயணபுரத்தில் தங்கி அங்கே காலக்ஷேபங்களைத் தொடர வேண்டினர். அவர்களின் அழைப்பை ஏற்று திருநாராயணபுரத்திற்கு அவர்களிருவரும் சென்று காலக்ஷேபத்தைத் தொடர்ந்து நடத்தி பூர்த்தி செய்தனர். அங்கே திருமலையாழ்வார் ஈட்டின் ஆழ்ந்த கருத்துக்களைக் கற்றார். அவரையும் அவருடைய தொண்டுணர்வையும் கண்டு மகிழ்ச்சியுற்ற நாலூராச்சான் பிள்ளை தம்முடைய திருவாராதனப் பெருமாளை திருமலையாழ்வாருக்குக்  கொடுத்தார். இந்த வழியில் ஈடு 36000 படி நாலூராச்சான் பிள்ளை வாயிலாக, 3  சிறந்த ஞானிகளுக்கு – திருமலையாழ்வார், திருநாராயணபுரத்துஆயி, திருநாராயணபுரத்துப் பிள்ளை ஆகியோருக்குக்  கிடைத்தது. இதற்கு பிறகு திருமலையாழ்வார் ஆழ்வார்திருநகரிக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக வசிக்க விரும்பினார்.

வ்யாசன் : ஆழ்வார்திருநகரி நம்மாழ்வாரின் அவதாரத்தலம் தானே? சிதிலமடைந்திருந்த ஆழ்வார்திருநகரியைத் திரும்பவும் நிர்மாணித்தவர் திருமலையாழ்வார்தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த சரித்திரத்தை சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி : நீ சொன்னது சரியே வ்யாசா. ஆழ்வார்திருநகரியைத் திருமலையாழ்வார் சென்றடைந்த பொழுது அந்த இடமே ஒரு காடு போல காட்சியளித்தது. முகலாயர்களின் படையெடுப்பின் பொழுது, ஆழ்வார் ஆழ்வார்திருநகரியை  விட்டு கேரள/கர்நாடக எல்லைப் பகுதிக்குச் சென்றிருந்தார். மிகுந்த முயற்சியோடு   திருமலையாழ்வார் அந்த இடத்தைச் சுத்தம் செய்து நகரத்தையும் கோவிலையும்  புணர்நிர்மாணம் செய்து கோவிலின் ஆகமத்தையும் நிறுவினார். அவரே மதுரை மன்னனின் துணையுடன் ஆழ்வாரையும் திரும்ப அழைத்துக் கொணர்ந்தார். அவர் ஆழ்வார் மீதும் திருவாய்மொழியின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். திருவாய்மொழியைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததாலேயே அவர் திருவாய்மொழிப்பிள்ளை என்று அழைக்கப்பட்டார். அவர் தாம் பவிஷ்யதாசார்யனின் (எம்பெருமானார்) விக்ரஹத்தைக் கண்டு, அவருக்கென்று நகரத்தின் மேற்குப் புறத்தில் ஒரு கோவிலையும், கோவிலின் முன்பாக ஒரு சந்நிதித் தெருவையும் நான்கு மாட வீதிகளையும் நிர்மாணித்தவர். இந்த கோவிலைப் பராமரிக்க கைங்கர்யபரர்களை நியமித்தவரும் அவரே. அவரன்றி நாம் இன்று கண்டு மகிழும் ஆழ்வார்திருநகரியைக்  கற்பனைகூட செய்ய இயலாது.

திருவாய்மொழிப் பிள்ளையைப் பற்றி கேள்வியுற்ற அழகிய மணவாளன் (சந்நியாசம் ஏற்றுக் கொள்வதற்கு முன்பு மணவாளமாமுனிகள்) ஆழ்வார்திருநகரிக்குச் சென்று அவரிடம் சிஷ்யராகத்  தொண்டு செய்து அருளிச்செயல்களையும் அதன் பொருளையும் முழுதுமாகக் கற்றார். அவருடைய அந்திமக்காலத்தில் தமக்கு பிறகு நம் சம்பிரதாயத்தைத் தொடர்ந்து நடத்துவது யார் என்று  திருவாய்மொழிப் பிள்ளை கவலைப்படலானார். அழகிய மணவாளன் அந்த பொறுப்பை ஏற்பதாக உறுதி அளித்தார். மிகவும் மகிழ்வடைந்த திருவாய்மொழிப் பிள்ளை மாமுனிகளை ஸ்ரீபாஷ்யத்தை ஒருமுறைக் கற்று அதற்கு பிறகு திருவாய்மொழியின் மீதும் அதன் வ்யாக்யானங்கள் மீதும் தம் காலத்தில் ஈடுபடுமாறு பணித்தார். அதன் பின் திருவாய்மொழிப்பிள்ளை பரமபதிக்க, அழகிய மணவாளன் திருவாய்மொழிப்பிள்ளைக்கு அனைத்துச்  சரமகைங்கர்யங்களையும் செய்தார்.

திருவாய்மொழிப்பிள்ளை தம் காலம் முழுதையும் நம்மாழ்வாருக்கும் திருவாய்மொழிக்குமே அர்ப்பணித்தவர். அவருடைய முயற்சியினாலேயே நாம் ஈடு 36000 படி வ்யாக்கியானத்தை, அதன் மேன்மையை பிற்காலத்தில் உணரச்செய்த அழகியமணவாளமாமுனிகளின் வாயிலாகப் பெற்றுள்ளோம். ஆகையினால் குழந்தைகளே, திருவாய்மொழிப்பிள்ளை அவருடைய ஆசார்யன் மீதும் எம்பெருமானார் மீதும் கொண்டிருந்தப்  பற்றுதலைப் பெற அவருடைய திருவடித் தாமரைகளையே பணிவோம்.

குழந்தைகள் நாம் பெற்றுள்ள செல்வங்களைப் பற்றியும் அன்றைய உரையாடல்களையும்  எண்ணமிட்டவாறே ஆண்டாள் பாட்டியின் வீட்டை விட்டு கிளம்பினார்கள்.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2018/05/beginners-guide-thiruvaimozhip-pillai/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Learn periyAzhwAr thirumozhi (பெரியாழ்வார் திருமொழி) – 2nd Centum

Published by:

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:

Author – periyAzhwAr (பெரியாழ்வார்)

Santhai class schedule, joining details, full audio recordings (classes, simple explanations (speeches) etc) can be seen at http://pillai.koyil.org/index.php/2017/11/learners-series/ .

Full Series (periyAzhwAr thriumozhi)


Santhai (Learning) classes (ஸந்தை வகுப்புகள்)

Part 1 – 2.1
periyAzhwAr thirumozhi 2.1 -santhai-step 1
periyAzhwAr thirumozhi 2.1 -santhai-step 2
periyAzhwAr thirumozhi 2.1 -santhai-step 3
periyAzhwAr thirumozhi 2.1 -santhai-step 4
Part 2 – 2.2
periyAzhwAr thirumozhi 2.2 -santhai-step 1
periyAzhwAr thirumozhi 2.2 -santhai-step 2
periyAzhwAr thirumozhi 2.2 -santhai-step 3
periyAzhwAr thirumozhi 2.2 -santhai-step 4
Part 3 – 2.3
periyAzhwAr thirumozhi 2.3 -santhai-step 1
periyAzhwAr thirumozhi 2.3-santhai-step 2
periyAzhwAr thirumozhi 2.3-santhai-step 3
periyAzhwAr thirumozhi 2.3-santhai-step 4
Part 4 – 2.4
periyAzhwAr thirumozhi 2.4 -santhai-step 1
periyAzhwAr thirumozhi 2.4-santhai-step 2
periyAzhwAr thirumozhi 2.4-santhai-step 3
periyAzhwAr thirumozhi 2.4-santhai-step 4
Part 5 – 2.5
periyAzhwAr thirumozhi 2.5 -santhai-step 1
periyAzhwAr thirumozhi 2.5-santhai-step 2
periyAzhwAr thirumozhi 2.5-santhai-step 3
periyAzhwAr thirumozhi 2.5-santhai-step 4
Part 6 – 2.6
periyAzhwAr thirumozhi 2.6 -santhai-step 1
periyAzhwAr thirumozhi 2.6-santhai-step 2
periyAzhwAr thirumozhi 2.6-santhai-step 3
periyAzhwAr thirumozhi 2.6-santhai-step 4
Part 7 – 2.7
periyAzhwAr thirumozhi 2.7 -santhai-step 1
periyAzhwAr thirumozhi 2.7-santhai-step 2
periyAzhwAr thirumozhi 2.7-santhai-step 3
periyAzhwAr thirumozhi 2.7-santhai-step 4
Part 8 – 2.8
periyAzhwAr thirumozhi 2.8 -santhai-step 1
periyAzhwAr thirumozhi 2.8-santhai-step 2
periyAzhwAr thirumozhi 2.8-santhai-step 3
periyAzhwAr thirumozhi 2.8-santhai-step 4
Part 9 – 2.9
periyAzhwAr thirumozhi 2.9 -santhai-step 1
periyAzhwAr thirumozhi 2.9-santhai-step 2
periyAzhwAr thirumozhi 2.9-santhai-step 3
periyAzhwAr thirumozhi 2.9-santhai-step 4
Part 10 – 2.10
periyAzhwAr thirumozhi 2.10 -santhai-step 1
periyAzhwAr thirumozhi 2.10-santhai-step 2
periyAzhwAr thirumozhi 2.10-santhai-step 3
periyAzhwAr thirumozhi 2.10-santhai-step 4

Audio Downloads for Santhai (Learning) classes(Click the links to download the MP3 files and listen)

Part-1 -2.1

Part-2 -2.2

Part-3 -2.3

Part-4 -2.4

Part-5 -2.5

Part-6 -2.6

Part-7 -2.7

Part-8 -2.8

Part-9 -2.9

Part-10 -2.10

Meanings (discourses)

Lectures  (விரிவுரை) in thamizh

பெரியாழ்வார் திருமொழி விளக்கவுரை
பதிகம் 2.1
பெரியாழ்வார் திருமொழி விளக்கவுரை
பதிகம் 2.2
பெரியாழ்வார் திருமொழி விளக்கவுரை
பதிகம் 2.3
பெரியாழ்வார் திருமொழி விளக்கவுரை
பதிகம் 2.4
பெரியாழ்வார் திருமொழி விளக்கவுரை
பதிகம் 2.5
பெரியாழ்வார் திருமொழி விளக்கவுரை
பதிகம் 2.6
பெரியாழ்வார் திருமொழி விளக்கவுரை
பதிகம் 2.7
பெரியாழ்வார் திருமொழி விளக்கவுரை
பதிகம் 2.8
பெரியாழ்வார் திருமொழி விளக்கவுரை
பதிகம் 2.9
பெரியாழ்வார் திருமொழி விளக்கவுரை
பதிகம் 2.10

Audio Downloads for Santhai (Learning) classes(Click the links to download the MP3 files and listen)

Lectures (thamizh)

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்கள்

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< பிள்ளை லோகாசார்யரும் அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரும்

பராசரனும் , வ்யாசனும் , அத்துழாய் மற்றும்  வேதவல்லியோடு ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்குள் பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்களைப்  பற்றி தெரிந்து கொள்ளும் நிறைந்த ஆர்வத்தோடு நுழைகிறார்கள்.

பாட்டி: வாருங்கள் குழந்தைகளே! எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் முகங்களில் உற்சாகம் தெரிகிறதே !

வ்யாசன்: நமஸ்காரம் பாட்டி. நாங்கள் எல்லாரும் நலமாக இருக்கிறோம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஆம் பாட்டி, நீங்கள் சொல்வது சரி தான். பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.

பாட்டி: ஆம் குழந்தைகளே, நானும் உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நாம் சென்ற முறை கலந்துரையாடினது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அவரது சிஷ்யர்களின் பெயர்களை யாராவது சொல்கிறீர்களா?

அத்துழாய்: பாட்டி, அவர்களது பெயர்கள் எனக்கு நினைவிருக்கிறது! கூரகுலோத்தமதாசர், விளாஞ்சோலைப் பிள்ளை, திருமலையாழ்வார் (திருவாய்மொழிப்பிள்ளை), மணப்பாக்கத்து நம்பி, கோட்டூர் அண்ணர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடிப்பிள்ளை, கொல்லிகாவலதாசர்.

பாட்டி: நல்லது அத்துழாய், நீங்கள் நினைவில் கொண்டிருப்பது நன்று! இன்று விரிவாகப் பார்க்கலாம். முதலில் நான் உங்களுக்கு கூரகுலோத்தமதாசரைப் பற்றிச் சொல்கிறேன். 

குழந்தைகள்: சரி, பாட்டி!

பாட்டி: கூரகுலோத்தமதாசர் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர். திருமலையாழ்வாரை (திருவாய்மொழிப்பிள்ளை) நம் ஸம்ப்ரதாயத்திற்குத்  திரும்பிக்கொண்டு வந்ததில் முக்கிய பணியாற்றினார். பிள்ளைலோகாசார்யரின் அத்யந்த சிஷ்யராய் இருந்து அவருடன் திருவரங்கனுலாவிற்குச் (முகலாய படையெடுப்பின் பொழுது நம்பெருமாளுடன் சென்றது ) சென்றார். கூரகுலோத்தமதாசர், திருமலையாழ்வாரைத் திருத்த பல முயற்சிகள் எடுத்ததால், மாமுனிகள் “கூரகுலோத்தமதாசம் உதாரம்”  (மிகுந்த கருணையுடையவர் என்றும்  தாராள குணம் படைத்தவர் என்றும் ) என்று சிறப்பிக்கிறார்.  பின், திருமலையாழ்வார் மிகுந்த நன்றியோடு கூரகுலோத்தமதாசரைப் பணிந்து தாசரோடே  தங்கியிருந்து அவர் பரமபதித்த பிறகு ஆழ்வார்திருநகரிக்குச் சென்றார். ஸ்ரீவசனபூஷணத்தில், ஒரு சிஷ்யனுக்கு “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது நிச்சயமாக கூரகுலோத்தமதாசருக்கும்  திருமலையாழ்வாருக்கும் தகும். ஆகையால்  நாம் அனைவரும் பிள்ளை லோகாசார்யரின் திருவடியை நினைவில் கொண்ட கூரகுலோத்தமதாசரை நினைவில் கொள்வோம். 

வேதவல்லி: பாட்டி, நாங்கள் அனைவரும் கூரகுலோத்தமதாசரைப் பற்றித் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. ஒரு ஆசார்யனை சிஷ்யன் எப்படி மதிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டோம்.

பாட்டி: ஆம் வேதவல்லி, அனைவரும் “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்” என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் இப்பொழுது விளாஞ்சோலைப் பிள்ளை என்னும் மற்றோரு முக்கிய சிஷ்யரைப் பற்றிப் பார்ப்போம்.

வ்யாசன்: பாட்டி, எனக்கு அவர்க்கு ஏன் “விளாஞ்சோலைப் பிள்ளை” என்ற பெயர் வந்ததென்று தெரியும். திருவனந்தபுரத்து பத்மநாபஸ்வாமி திருக்கோயிலின் கோபுரத்தைத் தரிசிப்பதற்காக விளாமரங்களை ஏறியதால் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது.

viLAnchOlai piLLai

பாட்டி: நன்று, வ்யாஸா, நீ சொன்னது சரியே. ஈழவ குலத்தில் பிறந்ததால், அவர் கோவிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. பெருமாளைத் தரிசிக்க, விளாமரத்தை ஏறி மங்களாசாஸனம் செய்வார். பிள்ளை லோகாசார்யரின் அருளால், ஈடு, ஸ்ரீபாஷ்யம், தத்வத்ரயம், மற்றும் பல ரஹஸ்யக் க்ரந்தங்களை, பிள்ளை லோகாசார்யரின் தம்பியான அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரிடம் கற்றார்.

விளாஞ்சோலைப் பிள்ளை ஸ்ரீவசனபூஷணத்தை தனது ஆசார்யரான பிள்ளை லோகாசார்யரிடம் கற்றார். அதன் பொருளைச் சொல்வதில் வல்லவரானார். அவர்  ஸ்ரீவசனபூஷணத்தின் திரண்ட கருத்துக்களை “ஸப்தகாதை” என்னும் க்ரந்தத்தில் சாதித்தார். 

பராசரன்: விளாஞ்சோலைப் பிள்ளையின் ஆசார்யபிமானத்தைக்  கண்டு மிகுந்த ஆச்சர்யம் அடைகிறோம்.

பாட்டி: ஆம் பராசரா, அவர் செய்த மிகப்பெரிய கைங்கர்யமானது அவரது ஆசார்யனின் ஆணைப்படி திருமலையாழ்வாருக்கு உபதேசங்கள் செய்தது. பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீவசனபூஷணத்தின் அர்த்தங்களை  விளாஞ்சோலைப் பிள்ளை திருமலையாழ்வாருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென விரும்பினார். விளாஞ்சோலைப் பிள்ளையின் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியைப் பற்றி உங்களுக்குச்  சொல்ல விரும்புகிறேன். 

அத்துழாய்: பாட்டி, எங்களுக்கு அந்த நிகழ்வைப் பற்றிச் சொல்லுங்களேன்.

பாட்டி: நீங்களெல்லாம் அதனை கேட்க ஆர்வமாய் இருப்பீர்களென எனக்குத் தெரியும். உங்களுடன் ஸத்விஷயம் பகிர்ந்து கொள்வது எனது கடமையாகும், ஆகையால் கவனமாகக் கேளுங்கள்!

ஒரு நாள், நம்பூதிரிகள் பத்மநாபஸ்வாமிக்கு திருவாராதனம் செய்து கொண்டிருந்தார்கள். விளாஞ்சோலைப் பிள்ளை கோவிலுக்குள் நுழைந்தார். பெருமாளைத் தரிசிப்பதற்காக  சந்நிதிக்கு மூன்று வாயில்கள் இருப்பது நாமெல்லோரும் அறிந்ததே. விளாஞ்சோலைப் பிள்ளை பெருமாளின் திருவடித் தாமரைகளைக் காட்டும் வாயிலுக்கு அருகில் நின்றிருந்தார். அந்தக் காலத்தில் அவருக்கு கோயிலின் உள்ளே வர அனுமதி இல்லாததால், அவரைக் கண்டு திடுக்கிட்ட நம்பூதிரிகள், கோயில் கதவைச் சாற்றிவிட்டு வெளியே செல்லத் தொடங்கினர். 

அதே நேரத்தில், விளாஞ்சோலைப் பிள்ளையின்  சில சிஷ்யர்கள் கோவிலுக்குள் நுழைந்து அவர்களது ஆசார்யரான விளாஞ்சோலைப் பிள்ளை தன் சரீரத்தை விட்டு தனதாசார்யரான பிள்ளை லோகாசார்யரின் திருவடியை அடைந்தாரென தெரிவித்தனர். அவர்கள் திருப்பரியட்டத்தையும் (எம்பெருமானின் பிரசாதமான வஸ்திரம்) எம்பெருமான் சூடிக்களைந்த மாலைகளையும், விளாஞ்சோலைப் பிள்ளையின் சரமத்திருமேனிக்குச்  (பூதவுடலுக்கு) சாற்றுவதற்காக வாங்க வந்திருந்தனர். 

இதனைக் கேட்டவுடன் , நம்பூதரிகள் திகைத்து, விளாஞ்சோலைப் பிள்ளையின் மேன்மையைப் புரிந்து கொண்டனர். பின் அவர்கள் பெருமாளின் திருப்பரியட்டத்தையும் மாலைகளையும் அவர்களுக்குக்  கொடுத்தனர். 

வேதவல்லி: பாட்டி, எனக்கு விளாஞ்சோலைப் பிள்ளையின் இறுதி தருணங்களைப் பற்றிக் கேட்கையில்  மயிர்கூச்சல் ஏற்படுகிறது.

வ்யாசன்: ஆம் பாட்டி, எனக்கும் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வருகிறது. ஈழவ குலத்தில் உதித்த ஒருவரை நம் ஸம்ப்ரதாயத்தில் எவ்வாறு மதித்திருக்கிறோம் என்பது தெரிகிறது.

பாட்டி: ஆகட்டும் குழந்தைகளே, இன்று உங்களுடன் பொழுது நன்றாகக் கழிந்தது. இன்று நாம் கற்றுக்கொண்டதை நினைவில் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அடுத்த முறை நான் உங்களுக்கு திருவாய்மொழிப் பிள்ளையைப் பற்றி விரிவாகச் சொல்கிறேன்- விரைவில் சந்திப்போம்!

குழந்தைகள் அனைவரும் ஆண்டாள் பாட்டி வீட்டை விட்டு, தங்களின் கலந்துரையாடலைப் பற்றி எண்ணிக்கொண்டே  மகிழ்ச்சியாக செல்கிறார்கள் 

அடியேன் பார்கவி ராமாநுஜதாசி 

ஆதாரம் : http://pillai.koyil.org/index.php/2018/05/beginners-guide-pillai-lokacharyars-sishyas/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/


ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – பிள்ளை லோகாசார்யரும் அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரும்

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< நம்பிள்ளையின் சிஷ்யர்கள்

பராசரனும் வ்யாசனும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்குள் வேதவல்லி மற்றும் அத்துழாயுடன் நுழைகிறார்கள். பாட்டி திருப்பாவை அநுஸந்தித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவர்கள் அவள் முடிக்கும் வரை காத்துக் கொண்டிருந்தார்கள். பாட்டியும் அநுஸந்தானத்தை முடித்து விட்டு அவர்களை வரவேற்றாள்.

பாட்டி: வாருங்கள் குழந்தைகளே!

வ்யாசன் : பாட்டி, சென்ற முறை நீங்கள் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரர்களைப்  பற்றி கூறுவதாகச்  சொன்னீர்கள். அவர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்!

பாட்டி: ஆமாம் வ்யாசா! இன்றைக்கு நாம் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரர்களைப் பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம். சென்ற முறை சொன்னது போல, தனது ஆ்சார்யரான நம்பிள்ளையின் அருளாலும், நம்பெருமாளின் அருளாலும், வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற இரு புதல்வர்கள் பிறந்தனர். இருவரும் ராமலக்ஷ்மணர்களைப் போல வளர்ந்து நம் சம்ப்ரதாயத்திற்கு பல கைங்கர்யங்களைச் செய்தனர்.

நம்பிள்ளை பரமபதத்தையடைந்தபின் வடக்குத் திருவீதிப் பிள்ளை நமது சம்ப்ரதாயத்தின் அடுத்த ஆ்சார்யராகி தனது இரு புதல்வர்களுக்கு தமது ஆசார்யரான நம்பிள்ளையிடமிருந்து கற்ற அர்த்தங்களையெல்லாம் கற்றுக்  கொடுக்கலானார். சிறிது காலத்திற்குப் பின் வடக்குத் திருவீதிப்பிள்ளை தனது ஆசார்யரான நம்பிள்ளையை த்யானித்துக்கொண்டே தம் சரம திருமேனியை விட்டு பரமபதத்தையடைந்தார். அதன் பிறகு பிள்ளை லோகாசார்யர் நம் சம்ப்ரதாயத்தின் அடுத்த ஆசார்யரானார்.

அத்துழாய்: பாட்டி, பிள்ளை லோகாசார்யர் தேவப்பெருமாளின் மறு அவதாரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.


பிள்ளை லோகாசார்யர் காட்டழகிய சிங்கர் கோயிலில் காலக்க்ஷேபம் செய்யும் காட்சி – ஸ்ரீரங்கம் 

பாட்டி: ஆம், நீ கேட்டது சரி தான் அத்துழாய்! பிள்ளை லோகாசார்யர் தேவப் பெருமாளே தான். பிள்ளை லோகாசார்யர் தமது இறுதி நாட்களில் ஜோதிஷ்குடியில் நாலூர் பிள்ளையிடம் திருமலை ஆழ்வாருக்கு (திருவாய்மொழிப்பிள்ளை என்ற பெயர் கொண்டவர் ) வ்யாக்யானங்களைச் சொல்லித் தருமாறு பணித்தார். திருமலையாழ்வார் தேவப்பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்ய காஞ்சிபுரத்திற்குச் சென்ற பொழுது, அருகில் இருந்த நாலூர் பிள்ளையிடம், “நான் உமக்கு ஜோதிஷ்குடியில் சொன்னதைப் போல, நீர் திருமலையாழ்வாருக்கு அருளிச்செயல்களின் அர்த்தங்களைச் சொல்லித்தரவும்” என்றார்.

வேதவல்லி : பாட்டி, ஏன் பிள்ளை லோகாசார்யர் தனது இறுதி நாட்களை ஜோதிஷ்குடியில் கழித்தார் ? அவர் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவராயிற்றே?

பாட்டி: பிள்ளை லோகாசார்யர், அனைவரது உஜ்ஜீவனத்திற்காக, ஆழ்வார் பாசுரங்களின் ஆழ்ந்த அர்த்தங்களை எளிய தமிழில் அழகிய க்ரந்தங்களாக எழுதிய ஒரு சிறந்த ஆசார்யராவார். பலர், ஸம்ஸ்க்ருதத்தையோ தமிழையோ நிரம்பக் கற்காதிருக்கலாம். ஆனால் அவர்கள் பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களைப்  படித்துப்  பயன்பெற விரும்பலாம். அவர்களின் நலனிற்காக, பிள்ளை லோகாசார்யர் மிகுந்த கருணையோடு தன் ஆசார்யரிடம் கற்றதை எளிமையாகவும் சுருக்கமாகவும் எழுதி வைத்தார். ஸ்ரீவசனபூஷணம் என்பது நம் சம்ப்ரதாயத்தின் அர்த்தங்களைச் சொல்ல வந்த அவரது தலைசிறந்த படைப்பாகும். நமது ப்ரமாணத்தை ரக்ஷித்த முக்கிய ஆசார்யனாவார் நம் பிள்ளை லோகாசார்யர் (நம் சம்ப்ரதாயத்தின் ஞானாதாரத்தை வளர்த்துக்  காத்தவர் அவர்).

பிள்ளை லோகாசார்யர்  – ஸ்ரீரங்கம் 

பிள்ளை லோகாசார்யர் நமது ப்ரமாணத்தை மட்டுமில்லை நமது சம்ப்ரதாயத்தின் ஆணிவேறான ஸ்ரீரங்கம் நம்பெருமாளையும்  காத்தவர். ஸ்ரீரங்கத்தில் எல்லாம் சீராக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென முகலாயர்களின் படையெடுப்பைப் பற்றிய செய்தி காட்டுத் தீயைப் போல பரவியது. முகலாய மன்னர்கள் சொத்துக்கள் மிகுந்த கோயில்களை குறி வைப்பார்கள் என்பது யாவரும் அறிந்ததே. அதனால் அனைவரும் மிகுந்த கவலை கொண்டார்கள். பிள்ளை லோகாசார்யர் (மிகுந்த மூத்த ஸ்ரீவைஷ்ணவரானதால்) நிலைமையை சீர்தூக்கிப் பார்த்தார். சில ஸ்ரீவைஷ்ணவர்களை பெரிய பெருமாளுக்கு முன் ஒரு சுவற்றை எழுப்பச் சொல்லிவிட்டு, நம்பெருமாளுடனும், உபய நாய்ச்சியார்களுடனும் தெற்கை நோக்கி செல்லத்  தொடங்கினார். அவருக்கு மிகுந்த வயதான போதிலும், தனது உடலைப் பற்றிக் கவலை கொள்ளாமல், நம்பெருமாளுடனே பயணிக்கலானார். காட்டுவழியே சென்று கொண்டிருந்த பொழுது, சில கொள்ளையர்கள் அவர்களை வழிமறித்து, நம்பெருமாளின் நகைகளை அபகரித்தனர். பிள்ளை லோகாசார்யர் அவர்களின் மனதை மாற்றியதால், அவர்கள் அவரைச் சரணடைந்து நகைகளைத் திரும்பக்  கொடுத்தனர்.

ஜோதிஷ்குடி – பிள்ளை லோகாசார்யர்  பரமபதித்த இடம் 

பராசரன்: தேவப்பெருமாளின் அவதாரமாகத்தான் இருந்திருக்க வேண்டும், தியாகத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறாரே!

பாட்டி: ஆம் பராசரா, அதனால் தான் தேவப்பெருமாள் நம் சம்ப்ரதாய பெருமாள் என்றழைக்கப்படுகிறார். பிள்ளை லோகாசார்யர் ப்ரமாண ரக்ஷணம்  (க்ரந்த ரூபத்திலிருக்கும் நம் ஸம்ப்ரதாயத்தை காத்தல்) மட்டுமின்றி ப்ரமேய ரக்ஷணத்திற்கும் (நம்பெருமாளை காத்தல்) காரணமாயிருந்தார். ஒரு உண்மையான ஸ்ரீவைஷ்ணவனுக்கு எடுத்துக்காட்டாய் நம்பெருமாளின் பாதுகாப்பைப் பற்றியே எண்ணி இருந்தார். பெரியாழ்வார் எப்படி நம்பெருமாள் திருமேனியைப் பற்றியே எண்ணி அவர்க்கு பல்லாண்டு பாடினாரோ, பிள்ளை லோகாசார்யரும் நம்பெருமாளின் அர்ச்சாரூபத்தை ஒரு குழந்தையாகவே பாவித்து, தன்  உயிரே போகும் தருவாயிலும், முகலாய மன்னர்கள் நம்பெருமாளை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. நீங்கள் அடுத்த முறை பெருமாள் கோயிலுக்குச் செல்லும் போது, நம்முடைய இன்றைய சம்ப்ரதாயத்தின் நன்னிலை அவர்களைப் போல ஆயிரக்கணக்கான ஸ்ரீவைஷ்ணவர்கள் த்யாகத்தினால் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவர்கள், பின்வரும் சந்ததியினர் அனைவரும் பயனுறவேண்டும் என்றே  நம்பெருமாளையும் சம்ப்ரதாயத்தையும் காக்க கஷ்டப்பட்டனர். நாம் அவர்களுக்கு எந்த கைமாறையும் செலுத்த முடியாது தான் – ஆனால் அவர்களின் தியாகங்களை நன்றியோடு நினைவில் கொண்டு, நம் சம்ப்ரதாயத்தை மதித்து அதனை அடுத்த தலைமுறையினர்க்கு கொண்டு செல்ல முயலவேண்டும். 

அத்துழாய்: பாட்டி, பிள்ளை லோகாசார்யரின் இளைய தம்பி, அழகிய மணவாள பெருமாள் நாயனாரைப் பற்றிச் சொல்லுங்களேன்.

nayanar
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

பாட்டி: நாயனார் நம் சம்ப்ரதாயத்தின் சீரிய கருத்துக்களையொட்டி பல க்ரந்தங்களை எழுதினார். அவற்றில் ஆசார்யஹ்ருதயம் மிகச் சிறந்ததாகும். பெரியவாச்சான் பிள்ளையைப் போன்ற பெரிய ஆசார்யர்களை ஒத்த ஞானத்தை உடையவயராய் அவரை அனைவரும் மதித்தனர். அவரை அனைவரும் “ஜகத் குருவரானுஜ – லோகாசார்யரின் இளைய தம்பி” என்று அழைத்தனர்.  அவரது க்ரந்தங்கள் ஞானத்தைப் பிரகாசிக்கச் செய்யும் இரத்தினங்கள் என்றே கொள்ள வேண்டும். அவையில்லாமல் நம் சம்ப்ரதாயத்தில் பல அர்த்தங்கள் சாமான்ய மனிதர்களைச் சென்று சேர்ந்திருக்க முடியாது. மாமுனிகள் நாயனாரையும் அவரது படைப்புக்களையும் போற்றி, பிள்ளை லோகாசார்யருக்கு அடுத்து இவர் தாம் சம்ப்ரதாயத்துக்கு பல கைங்கர்யங்களைச் செய்துள்ளதாகச் சொல்கிறார். நாயனார் தன்  திருமேனியை விட்டு பரமபதத்துக்கு ஏக எண்ணினார். பிள்ளை லோகாசார்யர்,  நாயனார் பரமப்பதத்திற்கு ஏகிய பொழுது, துக்க சாகரத்தில் மூழ்கியவராய் அவரது திருமுடியை தன் மடியில் வைத்து அழுதார். நாயனாரை இந்த உலகம் குறுகிய காலத்தில் இழந்த ஒரு சிறந்த ஸ்ரீவைஷ்ணவராய் பார்க்கிறார், பிள்ளை லோகாசார்யர்.

வ்யாசன்: பிள்ளை லோகாசார்யர் மற்றும் நாயனாரின் வாழ்க்கை வரலாறு மிகுந்த சுவாரஸ்யமானதாகவும், உணர்ச்சிவசப்படச் செய்வனவாகவும் இருந்தன.

பாட்டி: ஆம், வ்யாசா. நமது ஆசார்யர்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கையைப் பற்றியும் பேசுகையில் நேரம் போவதே தெரிவதில்லை. வெளியே இருட்டி விட்டது. நீங்களெல்லாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அடுத்து நாம் சந்திக்கும் பொழுது, பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்களைப் பற்றிச் சொல்கிறேன்.

குழந்தைகள் அவரவர் வீட்டிற்குச் செல்லும் பொழுது வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஆகியோர்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கைகளைப் பற்றியும் நினைத்துக் கொண்டே சென்றனர்.

அடியேன் பார்கவி ராமாநுஜதாசி 

ஆதாரம் : http://pillai.koyil.org/index.php/2016/09/beginners-guide-pillai-lokacharyar-and-nayanar/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

బాల పాఠము – అపచారాలు (అపరాధాలు)

Published by:

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః శ్రీమత్ వరవరమునయే నమః

శ్రీ వైష్ణవం – బాల పాఠము

<< కైంకర్యం

పరాశర, వ్యాస, వేదవల్లి, అత్తుళాయ్ తో కలిసి బామ్మగారి ఇంటికి వస్తారు.

బామ్మగారు: రండి పిల్లలూ. మీరు కాళ్ళు చేతులు కడుక్కోండి, ప్రసాదం ఇస్తాను. ఈ నెల విశేషం ఏమిటో  మీకు తెలుసా?

పరాశర: నేను చెప్తాను నాన్నమ్మ. మాణవాళ మామునుల తిరునక్షత్రం ఈ నెలలోనే ఉంది. వైశాఖ మాసం మూలా నక్షత్రంలో వస్తుంది.

వేదవల్లి: అవును. ముదలాళ్వార్లు, సేనాధి పతి విశ్వక్సేనులు, పిళ్ళై లోకాచార్యుల తిరునక్షత్రాలు కూడా ఇదే నెలలో ఉన్నాయు. అవునా నాన్నమ్మా?

బామ్మగారు: అవును. ఇప్పటి వరకు ఆళ్వార్లు, ఆచార్యులు,  ఉత్తమ అనుష్ఠానాలు, కైంకర్యాల గురించి మనం చూసాము. ఇప్పుడు అపచారాల గురించి తెలుసుకుందాము.

వ్యాస: నాన్నమ్మా ‘అపచారం’ అంటే ఏమిటి?

బామ్మగారు:  భగవంతుడి పట్ల లేదా వారి భక్తుల పట్ల తప్పు చేస్తే దాన్ని ‘అపచారము’ అంటారు. మనమెప్పుడూ భగవానుడిని, వారి భక్తులను సంతోషపెట్టాలి. మనం చేసే పనులు పెరుమాళ్ళకు, భాగవతులకు బాధ కలిగిస్తే దానిని అపచారము అంటారు. ఇప్పుడు ఏయే అపచారాలు చేయకుండా దూరంగా ఉండాలో చూద్దాము.

అత్తుళాయ్: నాన్నమ్మ, అవేంటో వివరంగా చెప్తారా?

బామ్మగారు: సరే వినండి. శ్రీవైష్ణవులకు శాస్త్రం ప్రమాణం. శాస్త్రం నిర్దేశించిన మార్గంలో నడుచుకుంటారు. మన పూర్వాచార్యులు శాస్త్రాన్ని గౌరవించి, తమ అనుష్టానాలను క్రమం తప్పకుండా అనుసరించారు. వీరు భగవానుడి పట్లగానీ భాగవతుల పట్లగానీ హాని తలపెట్టాలని ఆలోచించేవారు కాదు. ఎంతో భయపడేవారు. కాబట్టి, మనం కూడా ఎప్పుడూ ఏ అపచారాలు చేయకుండా అన్ని సమయాల్లో జాగ్రత్త పడాలి. ఇప్పుడు మనం ఒకదాని తర్వాత ఒకటి వివరంగా చూద్దాము. ముందుగా మనం భగవత్ అపచారాల గురించి చూద్దాము.

వ్యాస: పెరుమాళ్ళ పట్ల అపచారము చేస్తే దాన్ని ‘భగవత్ అపచారము’ అంటారు, అవునా నాన్నమ్మా?

బామ్మగారు: అవును, భగవత్ అపచారాలు ఇవి.

  • భగవానుడిని ఇతర దేవతలకు (బ్రహ్మ, శివ, వాయు, వరుణ, ఇంద్ర మొదలగు వారు) సమానమని భావించడం ఒక అపరాధం.
  • ఒక శ్రీవైష్ణవిడిగా మారిన తరువాత, ఇతర దేవతలను పూజించడం కూడా భగవత్ అపచారమే. పెరుమాళ్ళే అందరిని సృష్టించారు.
  • నిత్యకర్మానుష్టాలు నిర్వహించక పోవడం భగవత్ అపచారములోకి వస్తాయి.  నిత్యకర్మానుష్టాలు మనకు భగవానుని ఆజ్ఞలు, ఆదేశాలు. కాబట్టి వారి మాటలకు కట్టుబడి మనము ఉండాలి. మనం వారి ఆదేశాలను ఆచరించకపోతే, మనం నేరం చేస్తున్నట్టు లెక్క. ఇంతకు ముందు ఈ విషయం గురించి మనం చెప్పుకున్నాము, అందరికి గుర్తుందనుకుంటాను.

పరాశర: అవును నన్నమ్మా. ప్రతిరోజు వ్యాస నేను సంధ్యావందనం క్రమం తప్పకుండా చేస్తాము.

బామ్మగారు: మీరు నిత్యకర్మానుష్టాలు క్రమం తప్పకుండా ప్రతిరోజూ చేస్తున్నారంటే, వినడానికి ఎంతో సంతోషంగా ఉంది.

  • మనం చేయకుండా దూరముండాల్సిన ఇంకొక ముఖ్యమైన విషయం ఏమిటంటే శ్రీ రాముడు, కృష్ణుడు సాధారణ మనుషులని భావించరాదు. భగవానుడే తన భక్తుల రక్షణ సహాయం కోసం ఈ అవతారాలు ధరించారని గుర్తుపెట్టుకోవాలి.
  • ఈ సంసారంలో మనం స్వతంతృలమని అనుకోవడం భగవత్ అపచారము. అందరూ పెరుమాళ్ళకు అధీనులమని అర్థంచేసుకొని వ్యవహరించుకోవాలి.
  • భగవానుడికి చెందిన వస్త్రాలు, తిరువాభరణాలు, స్థిర ఆస్తులు (భూములు) మొదలైన వస్తువులను దొంగిలించుట మహాపరాధం.

అత్తుళాయ్: నన్నమ్మా!  భాగవత అపచారము గురించి మాకు చెప్తారా?

బామ్మగారు: తప్పకుండా అమ్మా. భగవత్ భక్తుల పట్ల అపచారం చేస్తే దాన్ని ‘భాగవత అపచారము’ అంటారు. భగవత్ అపచారము కంటే భాగవత అపచారము అత్యంత క్రూరమైనది. పెరుమాళ్ళు తన భక్తుల బాధను తట్టుకోలేడు. కాబట్టి మనం భాగవత అపచారము చేయకుండా జాగ్రత్తపడాలి. ఈ క్రింది భాగవత అపచారాలు ఇవ్వబడ్డాయి.

  • ఇతర శ్రీవైష్ణవులకు మనం సమానమని భావించుట అపరాధం. అందరు శ్రీవైష్ణవుల కంటే మనం తక్కువ అని భావించాలి.
  • మనం శారీరికంగా గానీ, మానసికంగా గానీ భాగవతులను బాధ పెట్టకూడదు.
  • శ్రీవైష్ణవులను వారి జన్మ, కులం, జ్ఞానం, ఆస్తి, ఉండే చోటు, రంగు మొదలైన ఆధారంగా వాళ్ళని అవమానించకూడదు.

మన పూర్వాచార్యులు శ్రీవైష్ణవులతో వ్యవహరించేటప్పుడు ఎన్నో నియమ నిష్ఠలను అనుసరించేవారు. ఇతర శ్రీవైష్ణవులను అసంతృప్తి పరచకుండా, వాళ్ళ మనస్సుని గాయపరచకుండా ఎంతో జాగ్రత్తగా పడేవారు. ప్రతి ఒక్కరితో గౌరవంగా వ్యవహరించేవారు.

వేదవల్లి: నాన్నమ్మా, మేము తప్పకుండా ఇలాంటి అపచారాలు చేయకుండా పెరుమాళ్ళను సంతోష పెట్టే ప్రయత్నం చేస్తాము.

మిగితా ముగ్గురు పిల్లలు కూడా ఒకేసారి: అవును నాన్నమ్మా.

బామ్మగారు: చాలా మంచిది  పిల్లలు. ఇప్పటి వరకు నేను మీకు మన సాంప్రదాయం గురించి చాలా విషయాలు నేర్పించాను. ఇంకోమారు ఇక్కడికి వచ్చినప్పుడు వీలుని బట్టి ఇంకొన్ని విషయాలు చెప్తాను. చీకటి పడుతోంది. మీరు వెళ్ళే సమయమయ్యింది.

పిల్లలు: అవును ఎన్నో విషయాలు  నేర్చుకున్నాము నాన్నమ్మా. పెరుమాళ్ళు ఆచార్యుల కృపతో నేర్చుకున్నవన్నీ ఆచరణలో పెట్టడానికి ప్రయత్నిస్తాము.

బామ్మగారు: చాలా మంచిది.

పిల్లలు బామ్మగారితో మాట్లాడిన విషయాలను స్మరించుకుంటూ సంతోషంగా ఇండ్లకు వెళ్ళారు.

మూలము: http://pillai.koyil.org/index.php/2018/11/beginners-guide-apacharams/

ప్రమేయము (గమ్యము) – http://koyil.org
ప్రమాణము (ప్రమాణ గ్రంథములు) – http://granthams.koyil.org
ప్రమాత (ఆచార్యులు) – http://acharyas.koyil.org
శ్రీవైష్ణవ విద్య / పిల్లల కోసం– http://pillai.koyil.org